சென்னை: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்னிலை விவரங்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், பல இடங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் திமுக முன்னிலை வகித்து வரும் நிலையில், திமுக தொண்டர்கள் அனைத்து கட்டுப்பாடுகளையும் மறந்து கொண்டாடத் தொடங்கினர். சென்னையில் உள்ள திராவிட முன்னேற்ற கழக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வெற்றிக் கொண்டாட்டங்களைத் தடுக்கத் தவறியதற்காக தமிழக காவல் ஆய்வாளர் ஒருவர் இன்று சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நாட்டில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக, தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முன்னதாக தேர்தல் ஆணையம் தடை செய்திருந்தது. இந்த தடையை மீறி திமுக தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
#WATCH | DMK supporters continue to celebrate outside party headquarters in Chennai as official trends show the party leading on 118 seats so far.
Election Commission of India has banned any victory procession amid the #COVID19 situation in the country.#TamilNaduElections2021 pic.twitter.com/z6Fp5YRnKP
— ANI (@ANI) May 2, 2021
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் குழு தமிழக தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் நடத்தும் கொண்டாட்டக் கூட்டங்கள் பற்றிய அறிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், எதிர்பார்க்கப்படும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக மக்கள் கூட்டமாக கூடிய நிகழ்வுகள் குறித்து தேர்தல் குழு தீவிரமாக கவனித்து வருகிறது என்றார்.
"இது தொடர்பான ஒவ்வொரு வழக்கிலும் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யவும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓவை இடைநீக்கம் செய்யவும், இதுபோன்ற ஒவ்வொரு சம்பவம் தொடர்பான அறிக்கையை உடனடையாக சமர்ப்பிக்கவும் ஐந்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது" என்று தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கொரோனா தொற்று தீவிரமாக பரவிக்கொண்டிருப்பதால், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களையும் ஊர்வலங்களையும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் தடை செய்திருந்தது.
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடந்து வருகின்றது.
இதற்கிடையில், தமிழகத்தில் நேற்று 19,588 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவானது, 147 பேர் இறந்தனர்.
திமுக-வினரின் கொண்டாட்டங்கள் குறித்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், " தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். தேர்தல் ஆணையம் இவற்றை தீவிரமாக கண்காணித்து வருவதால், தங்கள் வீடுகளிலேயே கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ளுமாறு நாங்கள் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளோம். நாங்கள் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி" என்று கூறினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR