உடல் பருமனையும் தொப்பையை கரைக்கும் சக்தி வாய்ந்த பயனுள்ள எடை இழப்பு பயிற்சியான பிளாங்க் (Plank) என்னும் உடல் பயிற்சி மூலம், ஒரே மாதத்தில் தொப்பையை மளமள என குறைக்கலாம். இந்த பயிற்சி செய்ய எந்த தனிப்பட்ட சாதனமும் தேவையில்லை இதன் கூடுதல் சிறப்பு. மேலும், எந்த இடத்திலும் இந்த பயிற்சியை செய்யலாம். பிளாங்க் பயிற்சி , உங்கள் வயிற்று தசைகளுக்கு அதிக வேலை கொடுத்து வலுவாக்குவதால் தொப்பை வெண்ணெய் போல் கரையும். இந்த பயிற்சியை செய்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றம் துரிதமடைந்து, அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் பருமனும் குறையும் (Weight Loss Tips).
பிளாங் பயிற்சியை தொடங்கும் போது, முதலில் எளிய முறையை பின்பற்றி, பின்னர் கடினமான முறையை பின்பற்றுவது, பாதுகாப்பான வழியாகும். தினமும் இரு நிமிடம் பிளாங்க் உடற்பயிற்சி செய்தால், உங்கள் எடை படிப்படியாக (Health Tips) குறைய ஆரம்பிக்கும்.
பிளாங் பயிற்சி : எளிய முறை
1. முதலில் தரையில் வயிறு நெற்றி அனைத்தும் தரையில் படும்படி குப்புற படுக்க வேண்டும். கால் விரல்கள் தரையில் பதித்தபடி ஊன்றிக் கொண்டு, கையை தரையில் பதித்தபடி உடலை மேலே உயர்த்த வேண்டும். இந்த நிலையில் உங்கள் முழு உடலும் உள்ளங்கை, கால் விரல்கள் தாங்கியபடி இருக்கும். இது எளிய பிளாங்க் பயிற்சி.
2. இடுப்பை கீழே இறக்கக் கூடாது. கால் விரல் மற்றும் கைகளால் உடலை தாங்கும் போது உடல் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். முதலில் ஒரு சில நிமிடங்கள் இந்த நிலையில் நீடித்த பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
3. முதலில் ஓரிரு நாட்கள், பிளாங்க் பயிற்சியில் சில நொடிகள் பிளாங்க் நிலையில் நீடிப்பதே கடினமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து செய்து வந்தால், எளிதாகி விடும். முதலில் 10 என்ற அளவில் தொடங்கி படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
4. பயிற்சியை தரையில் கை - கால் விரல்கள் ஊன்றிக் கொண்டு பிளாங்க் நிலையில் நீடிப்பதை முதலில் 20 முதல் 30 வினாடிகள் என்ற அளவில் தொடங்கி, பின்னர் ஒரு நிமிடம் வரை நீடிக்கவும். எவ்வளவு நேரம் பிளாங்க் நிலையில் இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய உடல், வயிறு உறுதியாகும்.
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க
பிளாங்க் பயிற்சி: கடின முறை
1. எளிய பிளாங்க் பயிற்சி சில நாட்கள் மேற்கொண்டு, உடலைத் தயார் செய்த பிறகு, கடினமான பிளாங்க் பயிற்சியை செய்யலாம். இதற்கும் குப்புறப்படுத்துக் கொண்டு. கால் விரல்களை தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.
2. எளிய பிளாங்க் பயிற்சியில் உள்ளங்கையைத் தரையில் பதித்து ஊன்றிக் கொண்டு பயிற்சி செய்த நிலையில், கடின பிளாங்க் பயிற்சியில் கைகளுக்கு பதில் முன்னங்கை முழுவதையும் தரையில் ஊன்றியவாறே உடலை பிளாங்க் நிலையில் நீடித்து பேலன்ஸ் செய்ய வேண்டும்.
3. இப்போது கால் விரல் மற்றும் முன்னங்கைகளில் உடல் எடை முழுவதும் தாங்கியபடி இருக்க வேண்டும். இப்போது உடலை தரையிலிருந்து மேலே உயர்த்த வேண்டும்.
பிளாங்க் உடற்பயிற்சி முழு உடலையும் பலப்படுத்துகிறது. பிளாங்க் பயிற்சியை தினம் செய்து வந்தால் முதுகு, தோள்பட்டை, கழுத்து, மார்ப்பு பகுதி, கைகள் என எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இதனால், உங்கள் தோரணை மேம்படும். இதன் மூலம், தொப்பை கரைவதோடு மாட்டுமல்லாமல், மூட்டு, முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். இதனால் தோற்றம் சிறப்பாக இருக்கும். உடலின் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகரிக்கும். இதன் காரணமாக முதுகு, மூட்டு வலிக்கான வாய்ப்பும் குறைகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 30 நாளில் கொழுப்பு கரையும்... உங்களை ஏமாற்றாத... குறைந்த கலோரி கொண்ட டயட் பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ