உலகெங்கும் உற்சாகமாய் கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகை...

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் திரளானோர் பங்கேற்றனர். 

Last Updated : Aug 12, 2019, 09:29 AM IST
உலகெங்கும் உற்சாகமாய் கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகை... title=

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் திரளானோர் பங்கேற்றனர். 

ஆண்டுதோறும் அராபிய மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்துகின்றனர். பின்னர் இனிப்பு மற்றும் இறைச்சி உணவை பகிர்ந்து உண்ணுவது வழக்கமாக இருந்து வருகிறது.

பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே திரண்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாம் மக்கள் இந்த நாளை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் இறைதூதர் என அழைக்கப்படும் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் வேளையில் பல்வேறு நாடுகளில் நேற்றே கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கேதட்ரல் மசூதியிலும், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அதிபர் பஷீர் அசாத் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். 

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்றார். இந்தோனேசியாவில் பக்ரீத் பண்டிகை ஜகர்தாவில் நடைப்பெற்றது. 

Trending News