சாத்தான்குளம் வழக்கு: வெளியிட்ட வீடியோவை நீக்கினார் RJ சுசித்ரா

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக RJ சுசித்ரா சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த வீடியோவை நீக்குமாறு தமிழக காவல்துறை அவரை கேட்டுக்கொண்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2020, 11:50 AM IST
  • பி. ஜெயராஜ் தனது மகன் ஃபெனிக்சுடன் மொபைல் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தார்.
  • RJ சுசித்ரா சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தனது சமூக ஊடுக அகௌண்டில் வீடியோவை வெளியிட்டார்.
  • வழக்கின் விவரங்களை கோடிட்டுக் காட்டும் படி இருந்த இந்த வீடியோ தேசிய அளவில் வைரலாகியது.
சாத்தான்குளம் வழக்கு: வெளியிட்ட வீடியோவை நீக்கினார் RJ சுசித்ரா title=

போலீஸ் காவலில் உயிர் இழந்த வணிகர்களான பி ஜெயராஜ் (Jayaraj) மற்றும் அவரது மகன் ஜே பெனிக்ஸ் (Fenix) ஆகியோருக்காக பல தரப்பு போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இதற்காக குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் (Satankulam) என்கவுன்டர் தொடர்பாக RJ சுசித்ரா (RJ Suchitra) சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த வீடியோவை (Video) நீக்குமாறு தமிழக காவல்துறை (Tamil Nadu Police) அவரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பி. ஜெயராஜ் தனது மகன் ஃபெனிக்சுடன் மொபைல் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் லாக் டவுனால் ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையிலும் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்சின் கடை திறந்திருந்ததால், பி.ஜெயராஜை போலீஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவரது மகன் ஃபெனிக்ஸ் தந்தையைக் காண காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு இருவரும் அடிக்கப்பட்டு வெகுவாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இருவரும் போலிஸ் காவலில் இறந்தனர் (Custodial death).

ALSO READ: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை CBI விசாரிக்க ஒப்புதல்: TN Govt

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை பற்றி கூறும் பல சமூக ஊடக இடுகைகள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. பல நெட்டிசன்கள் கொலைக்கு காரணமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். RJ சுசித்ராவும் இது தொடர்பாக தனது சமூக ஊடுக அகௌண்டில் வீடியோவை வெளியிட்டார். இந்த வழக்கின் விவரங்களை கோடிட்டுக் காட்டும் படி இருந்த இந்த வீடியோ தேசிய அளவில் வைரலாகியது.

இந்நிலையில்,  அந்த வீடியோவை தனது அகௌண்டிலிருந்து அகற்றுமாறு தமிழ்நாடு சிபி-சிஐடி வியாழக்கிழமை சுசித்ராவிடம் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து, RJ-வும் பின்னணி பாடகியுமான சுசித்ரா தனது சமூக ஊடக பக்கங்களிலிருந்து வீடியோவை நீக்கியுள்ளார்.

அந்த வீடியோவில், ஆர்.ஜே.சுசித்ரா இந்த கொடூரமான வழக்கு தொடர்பாக ஆங்கிலத்தில் விரிவாகக் கூறியுள்ளதோடு, போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ: சாத்தான்குளம் இரட்டை கொலையில் பச்சைப்பொய் சொன்ன CM பதவி விலகவேண்டும்!

Trending News