பஸ்கள், ரயில்கள் நிறுத்தம்: நிவர் சூறாவளிக்கு எப்படி தயாராகிறது தமிழகம்

செவ்வாய் முதல் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மாவட்ட பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் சில மாவட்டங்களில் முழுமையாகவும் சில மாவட்டங்களில் பாதியும் நிறுத்தப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2020, 11:07 AM IST
  • செவ்வாய் முதல் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மாவட்ட பேருந்து சேவைகள் ரத்து.
  • புதன்கிழமை புயல் கடற்கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும்.
  • நாகப்பட்டினத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஸ்கள், ரயில்கள் நிறுத்தம்: நிவர் சூறாவளிக்கு எப்படி தயாராகிறது தமிழகம் title=

கடுமையான சூறாவளி புயல் நிவர் புதன்கிழமை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால், செவ்வாய் முதல் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மாவட்ட பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் சில மாவட்டங்களில் முழுமையாகவும் சில மாவட்டங்களில் பாதியும் நிறுத்தப்பட்டுள்ளன.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக உருவெடுத்து, ஒரு நாள் கழித்து கடுமையான சூறாவளி புயலாக கடற்கரையை கடக்கக்கூடும் என்பதால் தமிழக அரசு திங்களன்று நிலைமையை மறுஆய்வு செய்து மாவட்ட நிர்வாகங்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியது.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி (K Palanisamy), மறுஆய்வுக் கூட்டத்தின் போது, ​​தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகளை முழுமையாக எச்சரிக்கையாக இருக்கவும், நிவர் சூறாவளிக்கு முன்னதாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.

மறுஆய்வு கூட்டத்தின் போது, புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேவையான உபகரணங்கள், மண் மூட்டைகள், லாரிகள் மற்றும் பிற இயந்திரங்களுடன் தயார் நிலையில் இருக்குமாறு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றுவது, நிவாரண முகாம்களில் உணவு வழங்கல், படகுகள் மற்றும் மீனவர்களின் வலைகளைப் பாதுகாத்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, பெரிய ஏரிகளில் நீர் நிலைகளை கண்காணித்தல் மற்றும் நடமாடும் தொலைத்தொடர்பு தகவல் வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கும் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மைப் படையின் (NDRF) ஆறு அணிகள் கடலூரிலும், இரண்டு அணிகள் சென்னையிலும் நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு உள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மேலதிக உத்தரவு வரும் வரை மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற வேலைகளுக்காக தங்கள் சொந்த வண்டிகளில் வெளியே செல்ல வேண்டாம் என முதல்வர் மக்களைக் கேட்டுக்கொண்டார். டார்ச் விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் தீப்பெட்டிகளை தயாராக வைத்திருக்குமாறும் வேகமாக காற்று வீசும் வேளையில் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

நிவர் சூறாவளிக்கு முன்னதாக தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் தங்கள் அமைச்சுகளின் தயார்நிலையைப் பற்றி தெரிவித்தனர். உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூறாவளியை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிவாரண முகாம்களில் சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

ALSO READ: வங்கக்கடலில் உருவானது நிவர் புயல், இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு மாற வேண்டும் என்று அவர் கூறினார். புதன்கிழமை புயல் கடற்கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்று தங்கமணி கூறினார்.

வானிலை ஆய்வு மையத்தின் கூற்று படி, வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்.

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. புதுகோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குரிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் வியாழக்கிழமை வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ALSO READ: நிவர் புயல்; 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News