தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்) நடைபெற்ற ஊரக உள்ளாட்சித்தேர்தலில்முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெற்றது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்தனர். ஊரக உள்ளாட்சித்தேர்தலில் (Local Body Elections) மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக (DMK), அதிமுகவினர் (AIADMK) பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிட்டனர்.
#BREAKING | 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
Read More - https://t.co/DawzziVlxu | #TNElections | #LocalBodyElection2021 | #TNElectionCommission | @TNelectionsCEO | #ZeeNewsTamil | pic.twitter.com/a2Bkqk6C12
— ZEE Hindustan Tamil (@ZHindustanTamil) October 6, 2021
சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பட்டியலில் வேட்பாளர்களின் பெயர் இல்லாததது, தொழில்நுட்பக் கோளாறு, சிசிடிவி கேமரா வேலை செய்யாதது என வாக்குப்பதிவு சிறிதளவு பாதிக்கப்பட்டது.
மறுபுறம் ராணிப்பேட்டை உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் அறையின் ஜன்னல் வழியாக முகவர்கள் வாக்காளர்களுக்கு சைகை காட்டியதாகக் கூறி திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. பின்னர் போலீஸ் தலையிட்டு அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR