தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் வரை சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 29, 2024, 02:03 PM IST
  • கள்ளச்சாராயத்துக்கு எதிராக புதிய சட்டத்திருத்தம்
  • காய்ச்சினால், விற்பனை செய்தால் ஆயுள் வரை சிறை
  • 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் வரை சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் title=

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் இறந்ததன் எதிரொலியாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை தயாரிப்பது, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தொழிலாளியை கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர்... கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

தற்போதுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி அருந்துதல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதேபோல, மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், மூலப்பொருட்களை விநியோகித்தல், சாராயத்தை விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதிய தமிழ்நாடு அரசு இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது. எனவே தான், கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படகூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற  தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளசாரய விற்பனை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியம் என்றும் அரசு கருதுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனையின் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையினுடைய அளவும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுவகை மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்க, கொண்டு செல்வற்கும், வைத்திருப்பதற்கும், நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு, பத்து லட்ச ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல குற்றங்களை செய்ய பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு, மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணை முறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | குழந்தையை சுற்றிவளைத்த தெரு நாய்கள், நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை... வைரலாகும் சிசிடிவி காட்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News