ஆகஸ்ட் 5 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முக கவசம்: TN Govt.,

ஆகஸ்ட் 5 ஆம் தேதிமுதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்..!

Last Updated : Jul 27, 2020, 04:00 PM IST
ஆகஸ்ட் 5 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முக கவசம்: TN Govt., title=

ஆகஸ்ட் 5 ஆம் தேதிமுதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்..!

ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். முகக்கவசம் பெற ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீடுவீடாக டோக்கன் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க மாத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மக்களை முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வழியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

ALSO READ | SBI Recruitment 2020: CBO பதவிக்கான 3850 காலி பணியிடங்கள் அறிவிப்பு!!

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்.... ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீட்டிற்கே சென்று முக கவசத்திற்கான டோக்கன் வழங்கப்படும். பின்னர் டோக்கனை கொண்டு சென்று 5-ந்தேதி முதல் ரேசன் பொருட்களுடன் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும். 

மேலும், உலகளவில் குணம் அடைந்தோரின் சதவீதம் 61 ஆகவும் இந்திய அளவில் 63.9 ஆக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழக அளவில் 73.13 சதவீதம் பேர் குணமடைந்துளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் மட்டும் 83 % பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Trending News