'இது ஆன்மீக பூமி... திகவும், திமுகவும் நினைத்தாலும் அழிக்க முடியாது' - எல். முருகன் ஆவேசம்

Tamilnadu Latest News Updates: தமிழகம் ஒரு ஆன்மீக பூமி எனவும் திகவும், திமுகவும் அழிக்க நினைத்தால் அது முடியாது எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Sep 9, 2024, 09:37 PM IST
  • கோவையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
  • ஆன்மீகம் என்றாலே திமுக அரசு கைது செய்கிறது - எல். முருகன்
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது - எல். முருகன்
'இது ஆன்மீக பூமி... திகவும், திமுகவும் நினைத்தாலும் அழிக்க முடியாது' - எல். முருகன் ஆவேசம் title=

Tamilnadu Latest News Updates: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்வானது இன்று (செப். 9) நடைபெற்றது. இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்துவைத்து பார்வையிட்டார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,"மிக குறைந்த விலையில் மருந்துகள் அனைத்தும் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. மருந்தின் சந்தை விலையை விட பாதி்விலைக்கும் குறைவான விலையில் இங்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் இந்தியா முழுவதும் மிகவும் பயனளிக்கும் திட்டமாக செயல்படுத்தபட்டு வருகிறது" என்றார்.

மகாவிஷ்ணு விவகாரம்

மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக பேசிய அவர்,"விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் (செப். 11) கோவையில் நடைபெறும் விழாவில் நான் பங்கேற்க இருக்கிறேன். இந்து மத மக்களின் ஒற்றுமைக்காக பாலகங்காதார திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இது நடைபெறுகின்றது" என்றார். 

மேலும் படிக்க | சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி - ராமதாஸ்

தொடர்ந்து பேசிய அவர்,"மத்திய கல்விதுறை அமைச்சர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர். ஆனால் அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினால் அரசிடம் இருந்து பதில் இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. தாய்மொழி வழியிலான கல்வியை, தேசிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. இன்று கூட மத்திய கல்வித்துறை அமைச்சர் ட்வீட் போட்டுள்ளார்" என தமிழக அரசை சாடினார். மேலும், யூ-டியூபர் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பாஜக கமிட்டி தலைவர் (ஹெச். ராஜா) பதில் சொல்வார் என பதிலளித்தார். 

சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி

மேலும், "செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை நிறுத்த முடியாது. நாளிதழ், டிவி தாண்டி செல்போன் வந்துவிட்டது. இப்பொது ஏ ஐ வந்துவிட்டது. ஆக்கப்பூர்வமான விஷயங்ளுக்கும் இவை பயன்படும். இவற்றை முறையாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேலிக்குறியதாக உள்ளது. சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுகின்றது. என்ஐஏ அலுவலகம் கோவைக்கு வரவும் வாய்ப்பு இருக்கின்றது. 

மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் செய்தியாளர் என்கின்றனர். இதை முறைபடுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது. இதற்காக புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கின்றது. இதற்காக பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றது. செய்தியின் தன்மை, பொது விஷயங்களுக்கு ஆக்கப்பூர்வமான செய்திகளை எடுத்து செல்வதாக இருக்க வேண்டும். யூ டியூப், இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

தேசத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லும் 69 யூ-டியூப் சேனல்களை முடக்கி இருக்கின்றோம். விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதற்கு வாழ்த்து. அவர் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு ஏன் பயப்படுகிறது என தெரியவில்லை. மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை. ஊடகங்களில்தான் இது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | தள்ளிப்போகிறதா தவெக மாநாடு...? குழப்பத்தில் விஜய் - பின்னணி என்ன?

தினமும் ஆறு கொலைகள்...

தொடர்ந்து, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பொன்விழா நகரில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது அலுவலகத்தில் விநாயகர் சிலை ஒன்றை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்திருந்தார். அந்த விநாயகர் சிலைக்கு இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, அந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று பவானி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் வந்தார். விநாயகர் வழிபாட்டில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தினமும் ஆறு கொலைகள் நடக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகிவிட்டது.  

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி

மேலும் தமிழகத்தில் வீதி வீதியாக முக்குக்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகின்றனர். அத்துடன் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று அரசாங்கத்திற்கே தெரியாது. ஆன்மீகம் என்றாலே திமுக அரசு கைது செய்கிறது.

மேலும் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க திமுக அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அத்தனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. அதனை திகவும் ,திமுகவும் அழிக்க நினைத்தால் அது முடியாது" என்றார்.

மேலும் படிக்க | இசை வெளியீட்டு விழாவை கல்லூரிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் அமீர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News