சென்னை: ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி போடும் செயல்முறையில், நேற்று மிக அதிகமாக 10,476 பேருக்கு தடுப்பூசி போட்டப்பட்டது. அதே நாளில், மையப்படுத்தப்பட்ட கோவின் போர்ட்டலில் பெயர் இல்லாத நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என பொது சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.
எனினும், சுகாதார ஊழியர்களின் பெயர்களை இனி இந்த போர்டலில் பதிவு செய்ய முடியாது. ஆனால் முன்னணி தொழிலாளர்களின் பெயர்களை பிப்ரவரி 7 வரை பதிவேற்றலாம்.
இதன் பொருள் என்னவென்றால், மாநிலத்தில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பெயர்களை உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை என்றால், அவர்கள் இனி முன்னுரிமை பட்டியலில் இருக்க மாட்டார்கள். இது வரை, கோவின் (COWIN) போர்ட்டலில் பட்டியலிடப்படாத சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்களின் பெயர்கள் போர்ட்டலில் சேர்க்கப்பட்டன. ஆனால் இனி அவ்வாறு செய்ய முடியாது என மாநிலத்தில் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் இணை இயக்குனர் (நோய்த்தடுப்பு) டாக்டர் கே வினய் குமார் கூறினார்.
புதன்கிழமை வரை, மதிப்பிடப்பட்ட 6 லட்சம் பேரில் 5.62 லட்சம் சுகாதார ஊழியர்களை அரசு போர்ட்டலில் சேர்த்துள்ளது.
ALSO READ: தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்?
"அனைத்து பயனாளிகளும் அவர்களுக்கு தடுப்பூசி (Vaccine) அளிக்கப்படும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, இடம் மற்றும் நேரம் பற்றிய செய்திகளைப் பெறுவார்கள். ஆனால் இந்த செய்திகளைப் பெறுவதற்கு முன்பு மக்கள் தடுப்பூசி போட வந்தாலும், அவர்களது பெயர்கள் தளத்தில் இருக்கும்படியால், அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.” என்று டாக்டர் வினய் கூறினார்.
புதன்கிழமை, மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,30,943 ஆனது. இவர்களில், 2,213 பேர் செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தொடங்கிய முன்னணி தொழிலாளர்கள். அதிக அளவில் இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள, பொது சுகாதாரத் துறை மேலும் 55 தடுப்பூசி மையங்களைச் சேர்த்தது. மாநிலத்தின் மொத்த மையங்களின் எண்ணிக்கை 400 ஆனது.
இந்த வகையில், புதன்கிழமைக்குள் 46,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் 10,313 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசிகளையும் 163 கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.
கோவாக்சின் வழங்கப்படும் ஆறு மையங்களில் இருக்கும் அதிகாரிகள், உள்நாட்டு தடுப்பூசி மீதான தயக்கம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது என்று கூறினர். தடுப்பூசி போட்டுக்கொண்ட 1.3 லட்சம் பேரில், 2,945 பேர் கோவாக்சின் தடுப்பூசியைத் தேர்வு செய்துள்ளனர். இருப்பினும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திறன் மாநிலத்தில் உள்ளது.
"எங்கள் இலக்கு மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு 600 பேருக்கு தடுப்பூசி போடுவது. அதே நேரத்தில் கோவிஷீல்டுக்கான (Covishield) இலக்கு கடந்த 18 நாட்களில் 16,000 முதல் 45,900 வரை அதிகரித்துள்ளது. இலக்கின் 27% ஐ எங்களால் அடைய முடிந்தது. கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்ட மையங்களில் உள்ள அதிகாரிகள் அங்கு இலக்கின் 32%-ஐ அடைய முடிந்ததாகக் கூறுகிறார்கள். முழுமையான எண்ணிக்கையில் பார்த்தால், உண்மையான எண்ணிக்கைகள் மிகவும் பின்தங்கி உள்ளன” என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தடுப்பூசி அதிகாரி ஒருவர் கூறினார்.
ALSO READ: தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அரசு அனுமதி!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR