தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!!
கொரோனா பாதித்த உறவினருக்கு மருத்துவமனையில் இடமில்லை என்று கூறிய ஊடகவியலாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருந்தே இல்லாத நிலையில் 56% பேரை குணப்படுத்தியுள்ளோம். சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தாக்கம் இல்லை, என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க முடியும். நேரடியாக அவர் மருத்துவமனைக்கு வரத் தயாரா? தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. பேரிடர் காலத்தில் செய்திவாசிப்பாளர் வரதராஜன் தவறான தகவலைப் பரப்பியுள்ளார். தவறான தகவலைப் பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றச்சாட்டுகள் சொல்லும் முன் சிந்தியுங்கள்.
READ | ஜூன் 15 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: HC
வரதராஜன் சொன்னக் குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மையில்லை. எந்த செயலாளரை அவர் தொடர்பு கொண்டார் என்பதை விளக்க வேண்டும். எந்த மருத்துவவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்ற தெளிவுபடுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாக பேரிடர் காலத்தில் தவறான தகவலைப் பரப்பியதாக, பெருந்தொற்றுநோய் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.