தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி குறித்து திங்களன்று இறுதி முடிவு

தமிழக அரசின் அறிவிப்பினால், நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்களுக்கு பலன் கிடைக்கும். ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெளியீடுகளாக இவை திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2021, 05:03 PM IST
  • சினிமா அரங்குகளில் 100% இடங்களுக்கு அனுமதித்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல்.
  • 50% இருக்கை பயன்பாடு தொடர வேண்டும் என கோரிக்கை.
  • ஜனவரி 11-க்குள் ஒரு தீர்வை உருவாக்கி விரிவான பதிலை அளிப்பதாக தமிழக தெரிவித்துள்ளது.
தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி குறித்து  திங்களன்று இறுதி முடிவு title=

சென்னை: பொங்கல் திருவிழாவிற்கு முன்னதாக திரையரங்குகளில் அனுமதிக்கக்கூடிய இருக்கை அளவு குறித்து ஜனவரி 11 திங்கட்கிழமைக்குள் ஒரு தீர்வை உருவாக்கி விரிவான பதிலைக் கொண்டு வருவதாக தமிழக அரசு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. எஸ்.முத்து குமார் சார்பில் மதுரை வக்கீல் கண்ணன் தாக்கல் செய்த ரிட் மனுவை பெஞ்ச் விசாரித்தது.

சினிமா அரங்குகளில் 100% இடங்களில் மக்கள் அமர அனுமதித்த தமிழக அரசின் சமீபத்திய உத்தரவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் இந்த விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. COVID-19 தொற்றுநோயால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் மற்றும் வைரஸின் புதிய மாறுபாடு குறித்த அச்சம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மனுதாரர் இந்த உத்தரவை எதிர்த்தார்.

தொற்றுநோய்களுக்கு மத்தியில், இது பொது சுகாதார அபாயமாக இருப்பதால், தமிழக அரசாங்கத்தின் சமீபத்திய உத்தரவை பலர் விமர்சனம் செய்தனர். பல பகுதிகளிலிருந்தும் இது குறித்த விவாதங்கள் தொடங்கின. அரவிந்த் சுவாமி உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள், தற்போதுள்ளபடி 50% இருக்கை பயன்பாட்டுடன் தொடர்வது பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியிருந்தனர்.

தமிழக அரசின் (Tamil Nadu Government) உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை செயலாளர் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி, மத்திய அரசின் அன்லாக் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

ALSO READ: மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை HC தடை!!

மத்திய அரசின் (Central Government) சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, சினிமா அரங்குகளில் அதிகபட்சமாக 50% இருக்கை வசதிகள் மட்டுமே பயன்படுத்தப்பட வெண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், திங்களன்று மாநில அரசு தனது முடிவை அறிவிக்கும் வரை 50% பயன்பாடு சினிமா அரங்குகளில் (Theatres) தொடர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனையையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றி தியேட்டர்கள் அதிக ஷோக்களை நடத்திக்கொள்ளலாம் என ரிட் மனுவில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

தொற்றுநோய் தாக்கி, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் லாக்டௌன் விதிக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான படங்கள் OTT தளத்தில் வெளிவரத் தொடங்கின. இது தியேட்டர் உரிமையாளர்களை பெரும் கவலைக்கு ஆளாக்கியது. நவம்பர் முதல் 50% பார்வையாளர்களுக்காக சினிமா அரங்குகள் திரையிட அனுமதிக்கப்பட்டாலும், இது குறைந்த அளவு வசூலையே அளித்தது. புதிய, பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை என்பதும் தியேட்டர் உரிமையாளர்களின் கவலையை அதிகரித்தது.

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கள் அதிக ஆக்கிரமிப்புக்கு அனுமதி வழங்குமாறு முறையிட்டதைத் தொடர்ந்து 100% பயனாட்டிற்கு அனுமதிப்பதாக அரசாங்கத்தின் முடிவு வந்துள்ளது. இந்த அறிவிப்பினால், நடிகர் விஜய்யின் திரைப்படமான மாஸ்டர் (Master) மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்(Easwaran) ஆகிய படங்களுக்கு பலன் கிடைக்கும். ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெளியீடுகளாக இவை திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளன.

முன்னதாக, 2020 கோடையில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக படத்தின் ரிலீசை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. மேலும், இப்படமும் மற்ற படங்களைப் போலவே OTT தளத்தில் வெளியாகும் என்ற வதந்திகளும் கிளம்பின.

ALSO READ: மாஸ் காட்டும் விஜயின் மாஸ்டர் Promo: #MasterPromo3-யில் கலக்கும் வாத்தி விஜய்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News