பாட்டில்களுக்கு குட்பை சொல்ல டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம் - அமைச்சர் முத்துசாமி

பாட்டில்களில் மது விற்பனை செய்வதற்கு பதிலாக டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 2, 2023, 02:43 PM IST
  • டாஸ்மாக்கில் புதிய மாற்றம்
  • பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக்
  • அமைச்சர் முத்துசாமி தகவல்
பாட்டில்களுக்கு குட்பை சொல்ல டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம் - அமைச்சர் முத்துசாமி title=

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி இப்போது சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவருடைய துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பொறுப்பு அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர் இந்த துறையை கவனிக்க தொடங்கியது முதல் பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல் நடவடிக்கையாக மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கக்கூடாது என எச்சரித்த அவர், அதனை மீறுவோர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

மேலும், மது விற்பனை கண்காணிப்பு மற்றும் முறைகேடுகள் தடுப்பது குறித்தும் அமைச்சர் முத்துசாமி கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மது இனி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக்குகளில் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அதிகாரிகள் வெளி மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருவதாகவும், அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார். ஈரோடு  மாவட்டம் பவானி அருகேயுள்ள  குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்தை தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

மேலும் படிக்க | சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, " மது விற்பனையில் சில தவறுகள் முன்பு நடந்து இருக்கலாம். முழுமையாக தடுக்க அரசுக்கு 2 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. மதுபானங்களை டெட்ரா பேக்கில் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற பகுதிகளில் மதுபானங்கள் டெட்ரா பேக்கில்  விற்பனை நடைபெற்று வருவதை அதிகாரிகள் குழு  ஆய்வு செய்து வருகிறது. மேலும், தொழிற்சங்கள், மதுபான உற்பத்தியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் டெட்ரா பேக் தொடர்பாக பேசி உள்ளோம். 

மற்ற மாநிலங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும். விளைநிலங்களில் மதுபான பாட்டில்களை வீசிவிட்டு செல்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். டெட்ரா பேக்கில் 99 சதவீதம் கலப்படம் தவிர்க்கப்படும். கையாளுவது சுலபம். மறுசுழற்சி செய்தவதால் விவசாயிகள் நன்மை அடைவார்கள். டெட்ரா பேக் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அதிலுள்ள  சிக்கல்கள் குறித்து அதிகாரிகள்  குழு வழங்கும் அறிக்கை அடிப்படையல் அமுல்படுத்தப்படும்" என்றார்.

மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News