தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?

Mayiladuthurai Head Constable Murder Case : தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் 6 சாராய வியாபாரிகள் குற்றவாளி என்று மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிக பட்சதண்டனையாக தூக்குதண்டனை விதிக்க கோரி அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 25, 2024, 07:34 AM IST
  • மயிலாடுதுறையில் தலைமை காவலர் கொலை
  • காரை ஏற்றி கொலை செய்த சாராய வியாபாரிகள்
  • 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்க அரசு வலியுறுத்தல்
தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை? title=

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன்சந்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு காரில் சாராயம் கடத்தி சென்ற நான்கு பேரை நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிங்காரம் தலைமையிலான போலீசார் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றனர். கொப்பியம் அரிகட்டி மதகு அருகில் சென்றபோது சாராயம் கடத்தி சென்ற காரை போலீசார் குழுவினர் வழிமறித்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலர் ரவிச்சந்திரன் (45) சாராய வியாபாரிகளின் காரை வழிமறித்துள்ளார். 

மேலும் படிக்க | கள்ளழகர் திருவிழாவில் நடந்த கொலை! வெளியான அதிர்ச்சிப் பின்னணி - என்ன நடந்தது?

அப்போது, காரை ஓட்டிய மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (54) என்பவர் காரை நிறுத்தாமல் தலைமை காவலர் ரவிச்சந்திரன் மீது காரை மோதி அவர் மீது ஏற்றி விட்டு நிற்காமல் தப்பி சென்றுள்ளனர். மார்பு எழும்புகள் உடைந்து படுகாயமடைந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி சென்னை போரூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன்(54), புளியம்பேட்டை கருணாகரன்(54), மீன்சுருட்டி சங்கர்(44), ராமமூர்த்தி(44) ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் ஆஜரானபோது கலைச்செல்வனுக்கு பதிலாக செல்வமும், கருணாகரனுக்கு பதிலாக செல்வக்குமாரும் ஆள்மாறாட்டம் செய்து கோர்டடில் ஆஜராகி உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கு பொய்யான தகவலை கூறி சரணடைந்துள்ளனர். 

இதனால் இவ்வழக்கில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி, நிறுத்திய 21 சாட்சிகள் பிறழ்சாட்சிகளின்றி சாட்சியம் அளித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை சேர்ந்த தலைமை காவலரை பணியில் இருந்தபோது காரை ஏற்றி கொலை செய்ததால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குதண்டனை விதிக்க வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் ராமசேயோன் வாதிட்டார். இதனால் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி கலைச்செல்வன் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று கூறி தண்டனை வழங்காமல் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News