சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வலைத்தளத்திலிருந்து மாணவர்கள் தங்கள் ரேங்க் பட்டியலை இனி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் படிப்பிற்கு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை அடுத்து 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர்.
ஏற்கனவே பொறியியல் படிப்பிற்கான (Engineering Courses) ரேண்டம் எண் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது ரேங்க் பட்டியல் வெளியானது. இணையதளம் வாயிலாக ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்திருந்த தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தற்போது அதை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தங்களுடைய ரேங்க் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நேற்றோடு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் 50 மதிப்பெண்கள் வரை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்று (Coronavirus) காரணமாக, இந்த ஆண்டு +2 வகுப்பு தேர்வு முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத முறையில் நிர்ணயிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
15-09-2021 மற்றும் 24-09-2021 இடையே சிறப்பு இட ஒதுக்கீடு ஆலோசனை நடத்தப்படும் என்றும் இது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 440 கல்லூரிகள் (TN Colloges) கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய மொத்த இடங்கள் 151870 ஆகும். கல்லூரிகள் மற்றும் காலி இடங்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது கல்வி இயக்குனரகத்தால் புதுப்பிக்கப்படும்.
ALSO READ:நீட் ரத்து : திமுக அரசின் பொய்யான வாக்குறுதி - அதிமுக காட்டம்
ALSO READ: சேலத்தில் நீட் தேர்விற்கு தயாரான மாணவன் தற்கொலை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR