COVID-19 Update: தமிழகத்தில் 4,230 பேர் பாதிப்பு, 97 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 4,230 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,88,407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 238 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2021, 07:14 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,230 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 97 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
  • இன்று 4,952 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.
COVID-19 Update: தமிழகத்தில் 4,230 பேர் பாதிப்பு, 97 பேர் உயிர் இழப்பு  title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகின்றது. பிற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் ஊரடங்கால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 4,230 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,88,407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 238 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 97 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,818 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 36,707 ஆக உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 74 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,818 -ஐ எட்டியுள்ளது. 

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 4,952 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,18,882 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மொத்தமாக 1,60,810 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 4,230 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது.  இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,418 ஆண்களும் 1,812 பெண்களும் அடங்குவர்.

ALSO READ: Tamil Nadu: 15 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு !!

இது தவிர தவிர அரியலூரில் 53 பேரும், செங்கல்பட்டில் 193, சென்னையில் 238 , கோவையில் 486, கடலூரில் 103, தர்மபுரியில் 97, திண்டுக்கல்லில் 39, ஈரொட்டில் 395, கள்ளக்குறிச்சியில் 102, காஞ்சிபுரத்தில் 67, கன்னியாகுமரியில் 75, கரூரில் 51, கிருஷ்ணகிரியில் 95, மரையில் 85, மயிலாடுதுரையில் 36, நாகப்பட்டினத்தில் 32, நாமக்கல்லில் 132, நீலகிரியில் 83, பெரம்பலூரில் 27, புதுக்கோட்டையில் 71, ராமநாதபுரத்தில் 20, ராணிப்பேட்டையில் 56, சேலத்தில் 268, சிவகங்கையில் 61, தென்காசியில் 26,  தஞ்சாவுரில் 239, தேனியில் 52, திருப்பத்தூரில் 29, திருவள்ளூரில் 104, திருவண்ணாமலையில் 174, திருவாரூரில் 60, தூத்துக்குடியில் 57, திருநெல்வேலியில் 30, திருப்பூரில் 243, திருச்சியில் 185, வேலூரில் 38, விழுப்புரத்தில் 66, விருதுநகரில் 62 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த 43 நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 5,000-க்கும் கீழ் வந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஊரடங்குக்கு பிறகு ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் (Lockdown) பல வித தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை உட்பட சில மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், கொரோனா தினசரி பாதிப்பு, சில மாவட்டங்களில் நேற்று இயல்பை வித அதிகமாக உயர்ந்திருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து மாவட்டங்களின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், 16 மாவட்டங்களில் மட்டும் புதன்கிழமை இருந்ததை விட வியாழனன்று எண்ணிக்கை அதிகருத்தது.

ALSO READ: Tamil Nadu Lockdown: மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News