இந்தியா முழுதும் கொரானாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒற்றை நாள் தொற்றின் அளவு மிக அதிகமாக உள்ளது.
நாடு முழுவதும் பல இடங்களில் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பலவகைப்பட்ட மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. முன்னெப்போதும் கண்டிறாத அளவுக்கு ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கும் (Vaccine) தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ALSO READ: Shocking: கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்தது SII நிறுவனம்
தமிழகத்தில் முதல் கட்டமாக, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் கட்டம் முடிந்து, தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. மத்திய அரசு அறிவித்துள்ளபடி, மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு (PM Modi) கடிதம் எழுதியுள்ளார். இதில் முதல் கட்டமாக, 10 நாட்களுக்குத் தேவைப்படும் குறைந்தபட்சம் 20 லட்சம் தடுப்பூசிகளையாவது முதலில் விரைவாக அனுப்புமாறும் கடிதத்தில் முதல்வர் பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.
தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார். முதல் கட்டமாக 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்கவேண்டும் என்றும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தான ரெம்டெசிவிரை குறைந்த விலைக்கு மாநிலங்கள் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையில் பலருக்கு அதிகமாக மூச்சுத் திணறலும் ஏற்படுகின்றது. ஆகையால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான (Oxygen Cylinder) தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் தொழிலாளர் துறை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR