10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும்: தேர்வுத்துறை

பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி!! தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2022, 06:12 PM IST
  • பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி.
  • நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.
  • பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும்: தேர்வுத்துறை title=

பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி!! தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மே மாதம் நடக்கவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கே இயற்கை எரிவாயு...தமிழக அரசு

தனித்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27 முதல் 29 வரை நடைபெற உள்ள செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மே 2022 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை  www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அரசுப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கே செலவு செய்ய வேண்டும்: கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News