2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.
அதிலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு பிறகு வெளியாகும் தமிழகத்தின் வேளாண் பட்ஜெட் என்பதால் அனைவரின் கவனமும் இன்று தமிழகத்தை நோக்கி இருக்கும்.
தி.மு.க அரசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்று விவசாயிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க | TN Budget 2022: மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்வு
தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்துக்கான விரிவான திட்டம் அறிவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீர்நிலைகள் தொடர்பாக இந்த வேளாண் பட்ஜெட்டில் அரசு என்ன சொல்லப்போகிறது என்பது விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும்.
நீர்நிலைகளை ஏற்படுத்துவது தொடர்பாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரின்றி இயங்காது உலகு என்றால், விவசாயத்தின் ஆணிவேறே தண்ணீர் என்பதால், தண்ணீர் பற்றிய அரசின் முயற்சி என்னவாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 நேரலையில் காண இங்கே கிளிக் செய்யவும்
இதனிடையே, நேற்று வெளியான தமிழக பட்ஜெட் பற்றி, மக்கள் நீதி மைய்யத்தின் கமலஹாசன் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன. (1/3)
— Kamal Haasan (@ikamalhaasan) March 19, 2022
வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. உணவுப் பதனமிடும் தொழிற்சாலைகளை அமைப்பது பற்றிய அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறுமா?
மேலும் படிக்க | மத்திய அரசு திட்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘தமிழக பட்ஜெட்’
விவசாயத்துக்கு 24 மணிநேரமும் தங்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற தி.மு.க தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற அரசு ஏன்ன முயற்சிகள் மேற்கொள்கிறது என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுகிறது.
ஏனென்றால், தற்போது பெரும்பாலான நேரத்தில், விவசாயத்துக்கு இருமுனை மின்சாரம்தான் வழங்கப்படுகிறது.
கரும்பு கொள்முதல் விலை என்னவாக இருக்கும்?
இந்த ஆண்டு தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட்டில் கரும்பு கொள்முதல் விலை தொடர்பான அறிவிப்பு, விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும் என்பதே தமிழக வேளாண் பெருமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நெல் கொள்முதலில் ஆன்லைன் நடைமுறை தொடருமா, இல்லை ஏற்கெனவே உள்ள நடைமுறையைக் கடைப்பிடிக்கலாம் என்று அரசு முடிவு செய்யுமா?
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2022: இளைஞர் நலன் மற்றும் செஸ் எவ்வளவு ஒதுக்கீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR