சென்னை: 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் நாட்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டின் (2020) முதல் கூட்டத்தொடர் (Assembly Session) என்பதால் ஆளுநரின் உரையுடன் காலை 10.00 மணிக்கு தமிழக சட்டபேரவை கூடுகிறது. அதன் பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் (Tamil Nadu Assembly Session) முதல் மாதம் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள், குடியுரிமை திருத்தம் சட்டம் உட்பட பல பிரச்சனைகளை எழுப்ப திட்டம் போட்டுள்ளனர். மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெற உள்ளது. அதேவேலையில், எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு எப்பது பதில் அளிப்பது என்பது குறித்து ஆளும் கட்சி ஆலோசனை செய்து வருகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது