தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு!

+2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

Last Updated : Jul 8, 2020, 11:52 PM IST
தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு! title=

+2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000-கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணத்தால் நிறைய பேர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது என்ற ஒரு புகார் எழுந்தது. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்ததால், விடுபட்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், பல்வேறு கட்டங்களில் தேதி ஒத்தி வைக்கப்பட்டு தற்போது 27 ஆம் தேதி இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்.... "+2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 24 ஆம் தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27  ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

மாணவர்கள் புதிய நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் தனித்தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

READ | FB, இன்ஸ்டாகிராம் உட்பட 89 செயலிகளை இந்திய ராணுவம் தடை செய்ய திட்டம்..!

+2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News