திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்புக்குழு அமைப்பு: நடிகர் சங்கம்

திரையுலகில் பெண்கள் பாதுகாப்புக்கு குழு அமைக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2018, 04:17 PM IST
திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்புக்குழு அமைப்பு: நடிகர் சங்கம் title=

திரையுலகில் பெண்கள் பாதுகாப்புக்கு குழு அமைக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு...

பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறி இருந்தார். இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. 

இந்நிலையில், தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் பெண்கள் பாதுகாப்புக்குழு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “திரைப்படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மன அழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக சுயமரியாதையோடு தங்கள் கலையை செயல்படுத்தும் சூழலை தக்க வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும். அவ்வகையில் அதை செயல்படுத்தி கண்காணிக்க குழு ஒன்றையும் அமைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News