கேரளாவில் தீயாய் பரவும் கொரோனா; தமிழக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்

நாடு முழுவதிலும் இரண்டாவது அலை தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், கேரளாவிலும், மகராஷ்டிராவிலும் தொற்று பாதிப்பு அதிகமாகவே உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2021, 09:58 AM IST
கேரளாவில் தீயாய் பரவும் கொரோனா; தமிழக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம் title=

 

நாடு முழுவதிலும் இரண்டாவது அலை தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், கேரளாவிலும், மகராஷ்டிராவிலும் தொற்று பாதிப்பு அதிகமாகவே உள்ளது.  

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று (Coronavirus) பாதிப்பை கருத்தில் கொண்டு, கேரள எல்லையை ஒட்டியுள்ள  கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு  தொற்று  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதனால், கேரளாவில் மூன்றாவது அலை  தொடங்கி விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் (Corona Second Wave) பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இருந்தாலும், மூன்றாவது அலை வந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து சிறப்பாக பரமாரிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 
மூன்றாவது அலை வந்தால் அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என கூறப்படும் நிலையில், அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான தனி வார்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. 

ALSO READ | கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 3,500-க்கும் கீழ் வந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஊரடங்குக்கு பிறகு ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News