முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பத்தப்பட்ட பேரறிவாளன் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்போது இவர் தமிழக அரசின் பரோலில் வெளியே உள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக பேரறிவாளனுக்கு தொடர்ந்து 10வது முறையாக தமிழக அரசு பரோல் வழங்கியது.
இந்நிலையில் ஜாமின் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
விசாரணையில் மத்திய அரசிற்கும், உச்சநீதிமன்றத்துக்கு கடும் வாக்கு வாதம் நிலவியது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. அது குடியரசு தலைவர் அதிகாரம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம், அதிகாரம் குறித்து பிறகு விசாரிக்கலாம், இப்போது ஜாமீன் பற்றி விசாரிக்கலாம் என்று கூறியது. மேலும், பேரறிவாளன் விடுதலை குறித்து மிகவும் தாமதம் செய்கிறீர்களே? சம்மந்தப்பட்ட நபர்(பேரறிவாளன்) 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளாரே என கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு ஏற்கனவே பேரறிவாளனுக்கான மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது என்று தெரிவித்தது. இதனால் தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையில் இருந்து விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தது. இந்நிலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மதித்து நிரந்தரமாக பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | 'போரை நிறுத்த புடினுக்கு உத்தரவிட முடியுமா?' : மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR