'இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது' என RK.சிங்கிடம் முதல்வர் வலியுறுத்தல்!

தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்திற்கு எதிரான பிரிவை நீக்க மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்...! 

Last Updated : Jul 8, 2020, 03:19 PM IST
'இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது' என RK.சிங்கிடம் முதல்வர் வலியுறுத்தல்!   title=

தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்திற்கு எதிரான பிரிவை நீக்க மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்...! 

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ள அமைச்சர் ஆர்.கே.சிங், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் மின்சார திருத்த மசோதாவில் தமிழகத்தின் நிலைப்பாடு, புதிய மின்விநியோக திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கண்டிப்பாக தொடர வேண்டும். அது போல் வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர வழங்க வேண்டும் என கண்டிப்புடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அது போல் தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்திற்கு எதிரான பிரிவை நீக்க மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

READ | மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்: MKS

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 1990-ல் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அது போல் வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய மின்சார திருத்தச் சட்டம் தொடர்பாக மாநிலங்களிடம் கருத்து கேட்டுள்ள மத்திய அரசு, மின்சார மானியங்களை ரத்து செய்யும் வகையில் நிபந்தனைகளையும் விதித்தது. 

இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் கடந்த மே மாதம் சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலவச மின்சாரத்தை நிறுத்த போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. 

Trending News