சாத்தான்குளம் கஸ்டடி மரண வழக்கு: கைதான SSI பால்துரை கொரோனாவால் மரணம்!!

சாத்தான்குளம் தந்தை-மகன் காவலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான 10 போலீஸ்காரர்களில் எஸ்.எஸ்.ஐ. பால்துரையும் ஒருவர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2020, 10:47 AM IST
  • மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.
  • சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.ஐ. பால்துரை ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார்.
  • CBI-யின் 5 விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று.
சாத்தான்குளம் கஸ்டடி மரண வழக்கு: கைதான SSI பால்துரை கொரோனாவால் மரணம்!!  title=

COVID சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சார்பு ஆய்வாளர் பால்துரை (SSI Pauldurai) ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார் என்று ஆரம்பகட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சாத்தான்குளம் (Sathankulam) தந்தை-மகன் காவலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான 10 போலீஸ்காரர்களில் எஸ்.எஸ்.ஐ. பால்துரையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் முறையே ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் இறந்தனர். போலீஸ் காவலில் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படவே அவர்கள் இருவரும் அவசர அவசரமாக கோவில்பட்டி சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இருவரும் இறந்தனர். இருவரும் ஜூன் 19 அன்று கைது செய்யப்பட்டனர். லாக்டௌன் சமயத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் கடையை திறந்து வைத்திருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து நீதிமன்றம் அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது.

இருவரும் காவல் நிலையத்திற்குள் அடிக்கப்பட்டதால் தான் இறந்தார்கள் என புகார் எழவே, முன்னதாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பான விசாரணையை கையாண்டிருந்த சிபிசிஐடி, 10 போலீஸ்காரர்கள் மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், உயர் கான்ஸ்டபிள் முருகன், சாத்தாங்குளம் போலீஸ் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் உட்பட ஐந்து பேரை கைது செய்தது.

இதன் பிறகு தமிழக அரசு, இந்த வழக்கை CBI-க்கு மாற்றியது. CBI, கொலைக்கான வழக்காக இந்த வழக்கின் FIR-ஐ மாற்றியது.

ALSO READ: சாத்தான்குளம் வழக்கு: சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு போலீஸ் பாதுகாப்பு

மேலும், சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த மேலும் 5 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு CBI-யின் 5 விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: சாத்தான்குளம் கொலை வழக்கு: மேலும் 3 போலீஸ்காரர்களை காவலில் எடுத்த சிபிஐ

Trending News