மக்களவை தேர்தலில் MNM கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி!!

Last Updated : Mar 24, 2019, 07:19 PM IST
மக்களவை தேர்தலில் MNM கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்! title=

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவக்குமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டி!!

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த 20 ஆம் தேதி அறிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின்  2 ஆம் கட்ட வேட்பாளர்கள் வருகிற 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.  

இந்நிலையில், கமீலா நாசர் மத்திய சென்னையிலும், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா வட சென்னையிலும் போட்டியிடுகின்றனர். இந்த இருவரைத் தவிர, வேறு அறிமுகமான நபர்கள் யாரும் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவகுமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரைப்படி ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த எம்.சிவகுமாருக்குப் பதிலாக எம்.ஸ்ரீதர் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

 

Trending News