எஸ்.பி. வேலுமணி மீது பதிவான வழக்குகளின் முழு விவரம் இங்கே

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2021, 07:23 AM IST
எஸ்.பி. வேலுமணி மீது பதிவான வழக்குகளின் முழு விவரம் இங்கே title=

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது உறவினர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி (SP Velumani) அவரது உறவினர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நேற்று முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டது. 120பி, 420, 409 IPC, 109 உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

ALSO READ | முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதன்படி வேலுமணியின் சகோதரர் அன்பரசன், கேசிபி இன்ஜினியர்ஸ் லிமிட்டெட், சந்திரபிரகாஷ், சந்திரசேகர், ஜெசு ராபர்ட் ராஜா, தி ஏஸ் டெக் மெஷினரி காம்போன்ண்ட்ஸ் இந்தியா, கன்ஸ்ட்ரக்ஸன் இன்ஃப்ரா லிமிட்டெட், கன்ஸ்ட்ரோமால் குட் லிமிட்டெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் ஃபவுண்டேசன்ஸ், வல்துர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்‌ஷ்மி ஹோட்டல், ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ், ஏஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா, கேயூ ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரை எஸ்.பி.வேலுமணி கோவை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டராக இருந்த நிலையில் அப்போது உறவினருடன் சேர்ந்து தனது சொந்த நிறுவனத்தை துவங்கி கோவை மாநகராட்சி டென்டர்களை வாங்கிவந்துள்ளார். 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார், ஆனால் அந்த நிறுவனத்தை தொடர்ந்து அவரது சகோதரர் அன்பரசன் நடத்தி வந்ததாக FIR கூறுகிறது.

2014 ஆம் ஆண்டில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்றபின் அவரது உறவினர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு பல டென்டர்களை கொடுத்து வந்துள்ளார். 462.02 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மாநகராட்சி டென்டர், 346.81 கோடி ரூபாய்க்கான கோவை மாநகராட்சி பணிகளுக்கான அரசு டென்டர் என மொத்தமாக 810 கோடி ரூபாய்க்கான டெண்டர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களும் நண்பர்களும் நடத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதே வருடம் அதிமுக ஆட்சி முடியும் வரை பல கோடி ரூபாய்க்கான அரசு கான்ட்ராக்டுகளும்,டென்டர்களும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்துள்ளதாக FIR கூறுகிறது.

ALSO READ | Tamil Nadu: பாஜக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News