SP பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2020, 09:16 PM IST
SP பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை title=

சென்னை: கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், அவருக்கு தொடர்ந்து ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் (Hospital Statement) தனது புதிய அறிக்கையில் கூறியுள்ளது.

அதேநேரத்தில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubramaniam) விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும், அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் பலர், இன்று மாலை 6 மணி முதல் வெகுஜன பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர் நலம் பெற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர். 

ALSO READ |  'பாடும் நிலா... எழுந்து வா' SPB-ஐ அழைக்கும் Super Star! ரசிகர்களிடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்!!

அவருக்காக அனைவரும் வேண்டுதல் செய்வது குறித்து பேசிய, அவரது மகன் எஸ்.பி.பி சரண், "அவரது ரசிகர்களின் வேண்டுதலில் மீண்டு வருவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

74 வயதுடைய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று (COVID-19) காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ALSO READ |  பிரபல பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட வீடியோ...!!

இந்தநிலையில், இன்றைய மருத்துவமனை அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், அவருக்கு தொடர்ந்து ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டு உள்ளது.

Hospital report about SP Balasubramaniam health

Trending News