திருச்சி விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Last Updated : Aug 19, 2019, 02:44 PM IST
திருச்சி விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவிப்பு! title=

திருச்சிராப்பள்ளி சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், பேரூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் பதினெழு நபர்கள், நேற்று (18.8.2019) சிறுநாவலூர் கிராம மஜரா, S.N புதூர் கிராமத்தில் நடைபெறும் விழாவிற்கு தனியார் வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக வாகனம் கிணற்றில் கவிழ்ந்து விழுந்தது. இந்த கோர விபத்தில்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், பேரூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. குழந்தைவேல் என்பவரின் மகன் திரு. குணசீலன், திரு. ஞானசீலன் என்பவரின் மனைவி திருமதி குமாரத்தி, திரு. தனபால் என்பவரின் மனைவி திருமதி கோமதி, திரு. முருகேசன் என்பவரின் மனைவி திருமதி கயல்விழி, திரு. இளங்கோவன் என்பவரின் மகள் சிறுமி யமுனா, மகன் சிறுவன் சரண், திரு. முருகேசன் என்பவரின் மகள் சிறுமி சஞ்சனா மற்றும் திரு. குணசீலன் என்பவரின் மனைவி திருமதி எழிலரசி ஆகிய எட்டு நபர்கள் உயிரிழந்தனர். 

இந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்,  இந்த விபத்தில் உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது
ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.  மேலும் இந்த கோர விபத்து குறித்து அறிந்த உடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 9 நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பித்துள்ளார். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்து கொடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து அவர்களுக்கு  ஆறுதல் கூறவும், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. வெல்லமண்டி என்.நடராஜன், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எம். ஆர். விஜயபாஸ்கர், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் திருமதி . எஸ். வளர்மதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு முதல்வர் உத்தரவு பிறப்பிதுள்ளார். 

மேலும் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Trending News