கோவை ஆட்சியர் அலுவலக ஊழியர்களை அச்சுறுத்தும் பாம்புகள்..!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் பின்புறம் பகுதியில் அரசு துறையின் பயன்படுத்தாத வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 12, 2022, 03:40 PM IST
கோவை ஆட்சியர் அலுவலக ஊழியர்களை அச்சுறுத்தும் பாம்புகள்..!! title=

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய கட்டிடங்கள் உள்ளது. இதில் சமூகநலத்துறை, உணவு பாதுகாப்புதுறை, குழந்தைகள் நலத்துறை, இ - சேவை மையம்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் பின்புறம் பகுதியில் அரசு துறையின் பயன்படுத்தாத வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் செடி கொடிகள் என குப்பை மேடாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. அன்மையில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே பாம்பின் தோல்கள் கிடந்ததால், ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவியது.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து 5அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புதற்குள் போகும் காட்சி வைரலாகி வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | திக்.. திக்..நொடிகள்’ புலியை வேட்டையாடிய ராட்சத முதலை - வைரல் வீடியோ 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  சுற்றித் திரியும் பாம்பை பிடிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குப்பை மேடுகளை சுத்தம் செய்ய வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | சவாலுக்கு தயாரா! மானை குறிவைக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News