‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தமக்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 4 கோடி ரூபாய் பாக்கியுள்ளதாகவும், தன்னிடம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் குற்றம்சாட்டியிருந்தார். அதன் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சம்பள பாக்கியையும் டிடிஎஸ் தொகையையும் தர உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். மேலும், அதுவரை அவர் தயாரிக்கும் மூன்று படங்களுக்கு செலவிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், பல உண்மைகளை மறைத்துள்ளதாகவும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் விநியோகிஸ்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து வழக்கில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழ் நிராகரிப்பு - அரசின் புது அப்டேட்டுக்கு பாராட்டு
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சனையில் தங்களுக்கு எதுவும் தொடர்பில்லை என்பதால் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர் பட்டியலிருந்து வருமான வரித்துறையை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | காணொளி காட்சி விசாரணை- பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வழக்கறிஞர்..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR