அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் செந்தில் பாலாஜி..? அவர் பதவிக்கு வரும் அடுத்த அமைச்சர் இவரா?

Senthil Balaji Arrest: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தனது அமைச்சர் பதவியை இழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், இவரது அமைச்சர் பதவி யாருக்கு போகும் என்ற கேள்வி மக்களிடையே நிலவி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2023, 04:47 PM IST
  • செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • அமைச்சர் பதவியை இழக்கிறர் செந்தில் பாலாஜி.
  • அவர் பதவிக்கு வரும் அமைச்சர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் செந்தில் பாலாஜி..? அவர் பதவிக்கு வரும் அடுத்த அமைச்சர் இவரா?  title=

தமிழ்நாட்டின் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பரிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பதவிக்கு யார் வருவது என்பது குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளன. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது..

அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவியில் இருந்தார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்ததை ஒட்டி, அமலாக்கத்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் சோதனை நடந்தது. அதையொட்டி அவரது சென்னை இல்லத்திலும் சேதனை நடத்தப்பட்டது. நேற்று, சுமார் 17 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனை முடிவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்..!

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி..

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து செல்ல இருந்தனர். அப்போது திடீர் நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி நிலை தடுமாறினார். இதையடுத்து அவர் உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜியின் கைது குறித்து பலரும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்த பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், அவரது பதவிக்கு வரும் அடுத்த அமைச்சர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

பதவி பரிபோகும் வாய்ப்பு..

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் இனி அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இவரை மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை பதவியில் இருந்து திமுக நீக்கிவிடும். இந்த நிலையில், இந்த பதவிக்கு வரப்போகும் அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஐ.பெரியசாமி புதிய அமைச்சரா? 

திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர், ஐ பெரியாசாமி. இவர், தற்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினராகவும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளராகவும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவியில் இருக்கிறார். அமைச்சர் பதவிகள் சமீபத்தில் மாற்றப்பட்ட நிலையில், இவருக்குத்தான் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை பதவி வழங்கப்பட இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அது மட்டுமன்றி, கட்சியின் மூத்த நிர்வாகி என்ற தகுதியும், ஐ.பெரியசாமியிடம் உள்ளதால் செந்தில் பாலாஜியின் இவருக்கு செல்லாம் என சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படியில்லை என்றால், வேறு சில மூத்த அமைச்சர்களுக்கு இரண்டு அமைச்சரவை பதவிகளும் பிரித்து வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்களாக இருக்கும் கே.என் நேரு மற்றும் எ.வ வேலுவின் இந்த அமைச்சர் பதவிக்கு தகுதியுடையவர்களின் பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தற்காலிக அமைச்சர் யார்? 

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலையில், அந்த அமைச்சரவையின் செயல்பாடுகள் தற்போது முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் கண்காணிக்கப்படும். 

மேலும் படிக்க | உதவி செய்ய வந்தவரை எட்டி உதைத்த செந்தில் பாலாஜி..! எக்ஸ்க்ளூசிவ் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News