கூவத்தூரில் 144 தடை -கலெக்டர் கஜலட்சுமி உத்தரவு

Last Updated : Feb 14, 2017, 04:09 PM IST
கூவத்தூரில் 144 தடை -கலெக்டர் கஜலட்சுமி உத்தரவு title=

கூவாத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள கூவாத்தூர் பகுதிக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் கோவளம் அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜனின் வாகனத்தை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, அசாதாரண சூழல் நிலவுவதால் கூவத்தூரில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி அறிவித்துள்ளார். கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று பாதையில் செல்லுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Trending News