சென்னை : பாஜக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ஒய்ஜி மகேந்திரனின் மகள் ஒய்ஜி மதுவந்தி. நடிகையும்,பாஜக செயற்குழு உறுப்பினருமான இவர் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஆசியானா அப்பார்ட்மென்டில் தனக்கு சொந்தமாக உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் 2016-ம் ஆண்டு இந்துஜா லேலாண்டு பைனான்ஸ் என்கிற ஒரு நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கிய சில தினங்களுக்கு மட்டுமே இவர் தவணை தொகையை செலுத்தி வந்தார் பின்னர் தவணையை செலுத்தாமல் இழுக்கடித்து வந்துள்ளார்.அந்த பைனான்ஸ் நிறுவனமோ இவரிடம் பலமுறை வலியுறுத்தியும், மதுவந்தி அதற்கு சற்றும் செவி சாய்க்கவில்லை. இவர் தவணையை செலுத்தாததால் அதிகாரிகள் அசல், வட்டி 1 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாயை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அவ்வாறு அந்த நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியும் மதுவந்தி பணத்தை திருப்பி செலுத்தவில்லை. மதுவந்தி அந்த நோட்டீசை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
மதுவந்தியின் இந்த முறையற்ற செயல் காரணமாக பைனான்ஸ் நிறுவனம் அல்லிக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டை சீல் வைக்குமாறும் அதனை இந்துஜா பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுவந்தியின் வீடு சீல் வைக்கப்பட்டு உரிய பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் மதுவந்தியின் வீட்டிற்கு சீல்.
வீடு வாங்க பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் நடவடிக்கை.#Madhuvanthi pic.twitter.com/bviAgXTvhQ
— ZEE Hindustan Tamil (@ZHindustanTamil) October 14, 2021
வீட்டை சீல் வைக்கும்பொழுது அதிகாரிகளிடம் மதுவந்தி ' வேண்டாம் சீல் வைக்காதீங்க' என்று கெஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு வீடியோவில் மதுவந்தி தனது 'வீட்டுக்கு யாரும் சீல் வைக்கவில்லை இது வதந்தி' என்று கூறிய நிலையில்,இவர் அதிகாரிகளிடம் கெஞ்சும் வீடியோ தீயாய் பரவுகிறது. முன்னர்,PSB பள்ளியில் ஒரு குழந்தைக்கு முதல் வகுப்பில் சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூபாய் 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு இடம் வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததால் இவர் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை நடந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ பண்டிகை காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியளித்த அரசு! இவற்றுக்கெல்லாம் இனி அனுமதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR