பொதுத்தேர்வு முடிவு விவரங்களை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது...

பொதுத்தேர்வு முடிவுகளை கொண்டு பள்ளிகள் விளம்பரம் செய்து ஆதாயம் தேடக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Last Updated : Apr 20, 2019, 05:36 PM IST
பொதுத்தேர்வு முடிவு விவரங்களை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது... title=

பொதுத்தேர்வு முடிவுகளை கொண்டு பள்ளிகள் விளம்பரம் செய்து ஆதாயம் தேடக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு துவங்கி மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றன. இதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஏப்ரல் 29-ஆம் தேதி 10-ஆம் வகுப்பிற்க்கும், மே 8-ஆம் நாள் 11-ஆம் வகுப்பிற்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகளை கொண்டு பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,... ஆரோக்கியமற்ற போட்டி சூழல் மற்றும் மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து வகையான பள்ளிகளும் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தரவரிசை பட்டியல் மற்றும் அதிக மார்க் எடுக்கும் மாணவர் பெயர், புகைப்பட விவரங்களை நாளிதழ், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. இதுதொடர்பாக எல்லா பள்ளி தலைமையாசிரியர்கள், நிர்வாகிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். 

மேலும், அரசு உத்தரவுப்படி செயல்படாத பள்ளிகள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரங்களையும் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தேர்வு முடிந்து விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை மன உலைச்சலுக்கு ஆளாக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவ்வடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News