10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்..!
கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் (ஜனவரி 19) முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் (Schools Reopen) என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்லும் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி அரசு பேருந்துகளில் (Govt bus) இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் (Vijayabaskar) தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால் 18 லட்சம் மாணவர்கள் 10 மாதங்களுக்குப் பிறகு மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர். கொரோனா வைரஸ் (Coronavirus) கட்டுக்குள் இருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறப்பட உள்ளன. முதற்கட்டமாக நாளை முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
ALSO READ | இன்று முதல் பள்ளிகள் திறப்பு! இந்த முக்கிய 10 விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
தமிழக அரசு (TN Govt) பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடக்கூடாது, விளையாட்டு பிரிவு கிடையாது, மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பழக வேண்டும். கட்டாயம் மாஸ்க், கிளவுஸ் அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கட்டுபாடுகள் நல்ல விஷயமாக இருந்தாலும், மாணவர்கள் அதனை கடைபிடிப்பார்களா என்பது சந்தேகம் தான் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பள்ளிகளுக்கு அரசு பேருந்தில் செல்லும் மாணவர்கள் சீருடை அணிந்து பழைய பஸ் பாஸ் கொண்டு செல்ல வேண்டும், தனியார் பள்ளி மாணவர்கள் பழைய ID கார்டு பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR