தமிழகத்தில் கொரோனா தொற்றின் மாறுபாடான ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் சூழலால் மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க தொடங்கிவிட்டது. இதனால் கொரோனா தாக்கம் குறைந்து திறக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு தற்காலிக விடுமுறை அளித்து உத்தரவிட்டது. பள்ளிகளில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த போதிலும் அதிவேக தொற்று பரவலின் காரணமாக 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ALSO READ | பேக்கரி ஊழியருக்கு அரிவாள் வெட்டு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
அதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை அரசு மீண்டும் அமல்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு காரணமாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது. ஏற்கனவே உயர்நீதிமன்றமும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தாமல், ஆன்லைன் வகுப்பை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 19ம் தேதி முதல் நடக்க இருந்த திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனையடுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த விடுமுறையை பொதுத்தேர்வுக்கு தயாராக பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR