திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகளில், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த திட்டமாகும். திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், இத்திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதனை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டன. இதற்கு பதிலளிக்கும் வகையில் விரைவில் மகளிர் உதவித்தொகை வழங்கப்படுமென உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். அண்மையில், மகளிர் தினத்தை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், எதிர்வரும் காலத்தில் உரிமைத்தொகை உள்ளிட்ட பெண்களுக்கான பலவகைத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2022-23: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு, முழு விபரம்
பலத்த எதிர்பார்ப்புக்கிடையே 2022 -2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி அமைந்தபின் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால், மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிபார்ப்பு எழுந்தது. ஆனால் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான அறிவிப்பு இடம்பெறவில்லை. பட்ஜெட் உரையை படித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிச்சுமை காரணமாக, இத்திட்டத்தை அரசின் முதலாண்டில் செயல்படுத்த முடியவில்லை எனக் குறிப்பிட்டார். மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்காக தகுதி வாய்ந்த பயனாளிகளைக் கண்டறியும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தார்.
கடந்த பட்ஜெட்டில் உரிமைத் தொகையைப் பெறுவதற்கு உரிய பயனாளிகளைக் கண்டுபிடித்து வழங்குவோம் என அடக்கி வாசித்த திமுக இன்றைய பட்ஜெட் உரையில் நிதி நிலைமை மேம்பட்டதும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என மழுப்பலாகப் பேசி அப்பட்டமாக மகளிரை ஏமாற்றியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் விமர்சித்துள்ளது.
உரிமைத்தொகையில் மகளிரை ஏமாற்றிய திமுக!
திமுக மாறவில்லை.. மக்கள் தான் மாறவேண்டும்!#மகளிர்_உரிமைத்தொகை#மகளிருக்கு1000ரூபாய் pic.twitter.com/ToVLbIcZje
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 18, 2022
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்: மாணவிகள் உயர்கல்வி தொடர மாதம் ரூ.1000! எப்படி விண்ணப்பிப்பது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR