திருச்சிராப்பள்ளி: கொரோனா தொற்று (Corona Virus) காலத்தில் பலரும் பல விதங்களில் மற்றவர்களுக்கு உதவி வருகிறார்கள். பிரபல நகைச்சுவை நடிகர் ‘ரோபோ’ ஷங்கர் (Robo Shankar) திண்டுக்கல் சரவணனுடன் பட்டுகோட்டை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு (Quarantine Centre) சென்று மிமிக்ரி மற்றும் தொடர்ச்சியான ஸ்டாண்டப் நகைச்சுவைகளை நிகழ்த்தினார். இது நோயாளிகளை மிகவும் உற்சாகப்படுத்தி அவர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தது. அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பேசினார். "மையத்தில் தனியாக இருப்பதால், பல நோயாளிகள் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களால் அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கூட பார்க்க முடிவதில்லை. இதுபோன்ற ஒரு நகைச்சுவை நிகழ்வு அவர்களை ஊக்கப்படுத்தி ஆறுதலளிக்கும் என்று நான் நினைத்தேன். எனவே எனது நண்பர் திண்டுக்கல் சரவணனின் ஆதரவையும் இதில் நான் நாடினேன், ”என்று நிகழ்ச்சிக்கு பின்னர் ஷங்கர் கூறினார்.
இந்த நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டும், ஆனால் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். “நான் அவர்களிடம் அன்பு வார்த்தைகளை பேசினேன், அவர்களுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தினேன். பலர் மகிழ்ச்சியின் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்" என்று அவர் கூறினார்.
இந்த திட்டம் தன் மனதில் பல நாட்களாக இருப்பதாகவும், இதற்கான தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் ஈ-பாஸுக்கு விண்ணப்பித்ததாகவும், அவரும் முழு மனதுடன் நோயாளிகளை சம்தித்து மகிழ்விக்க அனுமதித்ததாகவும் சங்கர் கூறினார்.
ALSO READ: Coronavirus News: தமிழகத்தில்இன்றைய நிலவரம் என்ன? பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் பாதிப்பு
“இது எனது தொழில் வாழ்க்கையின் மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதை தஞ்சாவூரிலிருந்து தொடக்கியுள்ளேன். அடுத்த நிகழ்ச்சி புதன்கிழமை திருநெல்வேலியில் உள்ளது. எனது சொந்த வழியில் நோயாளிகளுக்கு உதவ எனக்கு வாய்ப்பளித்த கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்றார் சங்கர்.