முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. நிகழ்ந்த பணம் பட்டுவாட உள்ளிட்ட பல்வேறு இடைபாடுகளுக்கு பிறகு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
வரும் டிசம்பர் 21-ம் நாள் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு சூடுபிடிக்க துவங்கியுள்ளது.இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி, திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக முன்னதாகவே அறிவித்துவிட்டன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
மேலும்,பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் ஆதரவாக ஓட்டு போடும் படி அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.