சென்னை ஆர்.கே.நகருக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், கடந்த முறை பிரசாரத்தின் போது எழுந்த பணம் பட்டுவாடா புகாரால் பேரில் தேர்தல் தடை செய்யப்படிருந்தது.
இந்நிலையில் இந்த முறை இது போன்ற அசம்பாவிதத்தை தடுக்க ஆர்கே நகரில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவும், தெருக்களில் தற்காலிக பூத் அமைக்கவும், அரசியல் கட்சியினர் சாலையோரங்களில் அமரவும் தடை விதித்துள்ளது.
வெளியூர் வாகனங்கள் ஆர்கே நகருக்கு வந்தாலோ, காரணமின்றி எந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டாலோ பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.