ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதிமுக ஆதரவு அளிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், போட்டியிடுகின்றனர். மேலும் தினகரன், ஜே.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் நடிகர் விஷாலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன. இந்நிலையில் தற்போது மதிமுகவின் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் இன்று கூடியது.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்குத்தான் மதிமுக ஆதரவு திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை மதிமுகவுக்கு உண்டு. எனவே இந்த இடைத்தேர்தலில் மதிமுகவின் ஆதரவை திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு அளிக்கிறோம். சட்டபேரவையில் தீர்மானம் நல்லிணக்கமான சூழல் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள நிலையில் இதை தொடக்க புள்ளியாக கருதலாம்.
இவ்வாறு வைகோ கூறினார்.