மதுரை: ஹீட் ஸ்டோக்கால் தொழிலாளிகள் உயிரை பறிகொடுத்தபோதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த அரசு, தென்மேற்கு பருவமழை அறிவிப்பு வந்ததற்கு பிறகு கட்டுமான தொழிலாளர்கள் வேலை கட்டுப்பாடு அறிவிப்பு என்பது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் அறிக்கையில் சொன்ன 10,000 கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என கேள்வி எழுப்பினார்.
கட்டுமான தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தற்போது அரசு விடுத்திருக்கிற அறிக்கை வெளியாகி இருக்கிறது. இது அறிக்கை பார்த்தவுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை என்று வருத்தப்பட்டார்.
தமிழகத்தில் வெயிலின் உக்கரம் உச்சத்தில் இருந்த நாட்களிலே இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்தபோது எல்லாம் கும்பகரண தூக்கத்தில் கொண்டிருந்தது இன்னும் ஒரு படி மேலே கும்பகோணம் தூக்கம் என்பது கூட ஆறு மாதம் தூங்கி, ஆறு மாதம் விழித்து விடுவார்கள் ஆனால் இங்கே கண்விழிக்காமலே ஆழ்ந்த நித்திரையில் தூங்கி கொண்டிருந்த திமுக அரசு ,வெயிலின் உக்கர உச்சத்தில் இருந்த போதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது ஆழ்ந்த நித்திரையிலிருந்து விழித்தெழுந்து இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறதை பார்க்கிறபோது நமக்கு சிரிப்பு தான் வருகிறது என்று சாடினார்.
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே மே 19ஆம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சில தென்மேற்கு பருவநிலை அதிக மழை பொழிகிற போது, நம்முடைய மாநிலத்திற்கு உபரி நீரால் அனைத்து அணைகளும் நிறைய கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.
கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாததால் நம்முடைய தமிழக அணைகளில் போதிய நீர் கிடைக்கவில்லை இந்த சூழ்நிலையில் பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய இந்த தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தான் இந்த தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
மேலும் படிக்க | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம்
இன்றைக்கு குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிற காரணத்தினாலே இன்றைக்கு திண்டுக்கல், தேனி ,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி,விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிற அறிவிப்பும், சென்னை வானம் மேகமூட்டமாக காணப்படும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
தமிழகத்தில் வெப்பச் சலனம் அதிகரித்து முடிந்து தற்போது கோடை மழை பெய்கிறது.ஆனால் தற்போது உள்ள அரசு அறிவிப்பு என்பது தாலி கட்டிய பிறகு மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம் என்பது போல எவ்வளவு பைத்தியக்காரத்தனமான முட்டாள்தனமாக ஒரு அறிவிப்பாக இருக்கிறது. ஆழ்ந்தநித்தரையிலிருந்து
தூங்கி இப்போது தான் எழுந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கொள்வதா? என்று கேட்ட அதிமுகவின் ஆர்.பி உதயக்குமார், சுட்டெரிக்கிற வெப்ப அலை காரணத்தினால் ஹீட்ஸ் ஸ்ட்ரோக் என்று தொழிலாளிகள் தங்கள் உயிரை பறிகொடுத்தபோதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த இந்த அரசு, இன்னைக்கு கோடை மழை பொழிந்து இன்றைக்கு தென்மேற்கு பருவமழை துவங்குகிற அறிவிப்பு வந்ததற்கு பிறகு கட்டுமான தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு விதித்தால், இந்த கட்டுப்பாட்டுக்கான அறிவிப்பு செயல்முறைக்கு வருவதற்கான நிலையும் நாம் பார்க்கிறபோது இப்போது இருக்கிற திமுக அரசுக்கும், மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என்பது தான்இந்த அறிவிப்பு வெளியே நமக்கு சுட்டிக்காட்டுகிறது என்று சாடினார்.
முதலமைச்சர் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறையோடு இருக்கிறாரா? மக்கள் நலன் சார்ந்து இருக்கிற திட்டங்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்கிறாரா? அல்லது இன்றைக்கு ஒரு பொம்மையாக முதலமைச்சராக அவர் செயல்படுகிறாரா என்பதுதான் இந்த அறிவிப்பு இன்றைக்கு நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | வீடு, கார் இல்லை... பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு... 2019 - 2024 ஓர் ஒப்பீடு!
திமுகவுடைய தேர்தல் அறிக்கையிலேநீர் மேலாண்மை குறித்து பல்வேறு அறிவிப்புகளை கொடுத்திருக்கிறார்கள் 10,000 கோடியிலே பெரிய ஏரி குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். மூன்று ஆண்டுகளுக்கு மேலே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டார்கள் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை இது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் கேட்கிறார்கள்
அதேபோல ரூ 2000 கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்று சொன்னார்கள் அதையும் செய்யவில்லை. சொல்லியதை செய்யவில்லை என்று கூட பரவாயில்லை ஆனால் விவசாயிகள் பயன்பெற்றகுடிமராமத்து திட்டத்தை இன்றைக்கு குழிதோண்டி புதைத்திருக்கிறார்கள் .அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது விவசாயிகளை வஞ்சிக்கிற ஒரு அரசாக இருக்கிறது.
ஆகவே தொழிலாளர்கள் நலன் சார்ந்த அறிவிப்பு என்று இந்த அரசு இன்றைக்கு வெளியிட்டு இருப்பது பட்டப்படிப்பு படிப்பதற்கு தகுதியான மாணவனுக்கு எல்கேஜி அட்மிஷன் நாங்கள் இலவசமாக கொடுத்திருக்கிறோம் என்பதை போல பைத்தியக்காரத்தனமான அந்த அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
ஆகவே உழைப்பு வர்க்கத்திற்கு இன்றைக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத ஒரு நிலையை நாம் பார்க்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் இன்றைக்கு இந்த அரசு எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தொழிலாளர்கள் வர்க்கமும் இந்த அரசு எதிர்த்து இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த வெயிலின் தாக்கத்தை விட இந்த அரசினுடைய தாக்கம், இந்த அரசினுடைய செயல்பாடு நிலையின் தாக்கம், இந்த அரசு கொடுத்த வாக்குதிலே நிறைவாற்றாத தாக்கமாக திமுக அரசியல் நடவடிக்கை அமைந்திருக்கிறது இது மக்களிடத்தில் அக்கறை இல்லாத தன்மை வெளிப்பட்டிருக்கிறது என கூறினார்.
மேலும் படிக்க | கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ