செஸ் ஒலிம்பியாட் - வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு செஸ் வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 28, 2022, 05:56 PM IST
  • மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடக்கிறது
  • தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்
  • செஸ் வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து ட்வீட்
செஸ் ஒலிம்பியாட் - வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் title=

4ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்து உள்ள மாமல்ல்புரத்தில் இன்று தொடங்குகிறது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் வருகை தந்திருப்பதால் அவர்களுக்கான அறை ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை எந்த சொதப்பலும் இல்லாமல் செய்திருக்கிறது அரசு. தமிழக அரசின் ஏற்பாடுகளை பார்த்த சர்வதேச வீரர்கள் பலரும் இதுபோல் ஏற்பாடை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை என புகழாரம் சூட்டுகின்றனர். அதேசமயம், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தமிழக அரசு வேண்டுமென்றே புறக்கணிக்கிறதென பாஜகவினர் தொடர்ந்து கூறுகின்றனர்.

மேலும் படிக்க | விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர்! ஆர் பி உதயகுமார் மீது லஞ்ச புகார்

இந்நிலையில் நடிக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ்... அனைத்து செஸ் வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக,செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடக்கும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி ஆகிய இடங்களை நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது செஸ் வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர், தானும் செஸ் விளையாடி மகிழ்ந்தார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அப்போ கறுப்புக்கொடி ; இப்போ வரவேற்பா ? - திராவிட மாடலுக்கு சீமான் சரமாரிக் கேள்வி

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்றால் அப்ப நான் யார் ? - ஜெயலலிதா கேட்பது போன்ற போஸ்டர் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News