மேகதாது விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரஜினி

மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்....

Last Updated : Dec 13, 2018, 03:42 PM IST
மேகதாது விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரஜினி title=

மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்....

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை தொடர்ந்து, இந்நிலையில் சமீபத்தில் காவிரி குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசு, அனுமதி அளித்த மத்திய அரசுக்கு திராகவும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், மேதாது விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால் தான் தீர்வு கிடைக்கும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் அணை கட்டுவதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவதில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது என்றும், அது எந்த அளவுக்கு உண்மை என தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஏன் ராஜினாமா செய்தார் என தெரியாமல் அது குறித்து பேச முடியாது எனவும் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

 

Trending News