தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

Last Updated : Jul 16, 2017, 11:40 AM IST
தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு title=

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி:-

தென்மேற்கு பருவ மழை தமிழக பகுதிகளில் ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து மழை இன்று நீடிக்கும். குறிப்பாக வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழையே பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News