புதுச்சேரி சட்டசபையில் CAAக்கு எதிராக தீர்மானம் அறிமுகம்! 3 BJP MLAக்கள் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மான அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Last Updated : Feb 12, 2020, 11:21 AM IST
புதுச்சேரி சட்டசபையில் CAAக்கு எதிராக தீர்மானம் அறிமுகம்! 3 BJP MLAக்கள் வெளிநடப்பு title=

புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மான அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கூறி 3 எம்.எல்.ஏ.க்களும் நேற்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதன்பின் கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினர். அப்போது, சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவர உள்ளதை அனுமதிக்க கூடாது என்று சட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி அவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதை கண்டித்து பாஜக கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

 

 

 

Trending News