அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் 2000 ரூபாய் -புதுவை முதல்வர் உறுதி!

கொரோனா முழு அடைப்பு காலத்தில் அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் ரூபார் 2000 அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : May 13, 2020, 07:33 PM IST
அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் 2000 ரூபாய் -புதுவை முதல்வர் உறுதி! title=

கொரோனா முழு அடைப்பு காலத்தில் அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் ரூபார் 2000 அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் அவர் குறிப்பிடுகையில்., "பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரையில் இந்த நோய்த்தொற்று உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என குறுப்பிட்டுள்ளார். ஏற்கனவே மாநில அரசுகள் பல மாநில வருவாய் இழந்துள்ள நிலையில் எதிர்வரும் நிலையினை சமாளிக்க இரண்டு மாத வருவாய் வழங்கிட வேண்டுமென்று கேட்டுள்ளோம். அமெரிக்கா GDP-யில் 16 சதவீதம், 30 சதவீதம் சீனா செலவு செய்கின்றது எனவும் மேற்கொள் காட்டியுள்ளார்.

மற்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சாலை, குறு- சிறு தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணங்களை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி தட்டுப்பாடு இருந்தாலும் அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கட்டிட தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின் படி காவல்துறை பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு COVID-19 நோய் தொற்று பரிசோதனை நடைபெற்றது, இதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்கிறது. அவர்களுடைய உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்தபோது அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லை என உறுதியாகியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க வியாபாரிகள் மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக கடை திறக்க அனுமதி கோரி உள்ளார்கள். இதுகுறித்து விரைவில் அறிவிப்போம். மாநில அரசின் ஒட்டுமொத்தமான செயல்பாடு இந்த நோய் தொற்றை தடுக்கும் நோக்கிலேயே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News