பொள்ளாச்சி -பாலியல் கொரூர விவகாரத்தை காத்திருப்பு பட்டியலில் வைத்த கோவை மாவட்ட எஸ்பியான பாண்டியராஜனுக்கு பதில் சுஜித்குமார் நியமனம்!!
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், கோவை மாவட்ட SP பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரத்தை செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார். மேலும், இவ்வழக்கை CBI விசாரணைக்கு மாற்றக் கோரும் தமிழக அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு புதிய அரசாணையை வெளியிடவும், விபரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக, தமிழக அரசு அந்த பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், கோவை மாவட்ட எஸ்.பி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இது தவிர கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கிலும், கோவை மாவட்ட எஸ்.பி. உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் மீது புகார் வந்தது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படியும், தொடர் புகார் அடிப்படையிலும், கோவை எஸ்.பி பாண்டியராஜனை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பாண்டியராஜன் காத்திருப்பு பட்டியலில் உள்ளார். கோவை மாவட்ட புதிய எஸ்.பியாக சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.